Monday, January 16, 2012

அன்பே சிவம் அன்புதான் சிவம்

அவ்வளவு, அழகாய் தெரியும்
பட்டாம் பூச்சியை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

அலையலையாய் வந்து
என் மனதை அள்ளி செல்லும்
கடல் அலையை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..


காலைபொழுதில், காம்பில் பால்குடிக்கும்,
இளங்கன்றின் அன்பை கூட

அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

உடம்பிலுள்ள நாடி, நரம்பெல்லாம்
மெய்சிலிக்க வைக்கும், மழைத்துளி சாரலை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

சத்தமில்ல ஓவியகாரி, அவள்
இரவு நேர அழகிய இராணி, அந்த நிலவை கூட,
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..


கண்ணீரும் கரைதொடும்,
மரணம் வரும் நேரத்திலும் பார்த்து
ரசித்துகொண்டே இருக்க தோன்றும்,
அந்த மொட்டு,மழலை குழந்தையின்
சிரிப்பை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

காதலியொறித்திக்காக கட்டிய
கல்லைறை சின்னமான, தினமும், பலர்
வந்துசெல்லும், அந்த தாஜ்மஹாலை கூட,
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

உயிரில்ல ஒன்றில் வண்ணம் தீட்டி,
கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும்,
உயிர் வண்ண ஓவியத்தை கூட..
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..



எனக்கு உயிர்தரும், உருவமில்லா
அந்த மெல்லிசை தென்றலை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

சொல் அன்பே !
சொல், இன்னும் ஏன் மௌனம்,
ஏன், எதற்கு,? உன்னை மட்டும் ரசிக்க !!
புரியாத புதிராய் !
தெரியாத விடையாய் !

யாரும், பார்க்க முடியாத பொக்கிஷத்தை, உனக்கு காட்டுகிறேன்,
அன்பே கண்ணாடி முன்பு நின்று
பார் !
ஆம் =====> நன்றாக பார் ..
என் உயிரின் அழகிய
உருவம் நீதான் .. நீ மட்டும் தான் …
அன்பே சிவம் -
அன்புதான் சிவம் ..
                அன்புடன்
                         கண்ணன

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள