Tuesday, January 17, 2012

அழுகையை மாற்றி சிரிக்கிறேன்


கறந்த  பாலின்  தூய்மையை  விட 
சுத்தமானது  நான்  உன்மேல்  கொண்ட  காதல் 
இதை  நீயும்  அறிவாய் 

பிறகேன்  என்னை  விட்டு  சென்றாய்  என்பது 
புரியாத  விடையாய்!

பல  காரணங்கள் சொல்லி  என்னை  பிரிந்தாய் !
உண்மை  உனக்கு  தெரியும்   !!



காரணம்  இல்லாமல்   இவனை  வெறுக்கிறோம்  என்று  ..

அளவற்ற  அன்பு  இன்று  என்னையே  அழித்து  விட்டது ..
நீ  என்னை  விட்டு  சென்ற  வலி  இன்னும்  ஆறாமல்  ரணமாய்  உள்ளது 

உன்  நினைவுகளின்  தேடல்  அதிகமாக  உள்ளது  .....
அழுகையை  மாற்றி  சிரிக்கிறேன் ,
பிரிவின் அழுத்தம்  தாங்க  முடியவில்லை 

புரிந்து  கொண்டு , நீயாக  
என்னை  தேடி  வரும்  போது 
நான்  இந்த  மண்ணுலகில்  புதைக்க  பட்டிருப்பேன் ....!!
                                                                   அன்புடன்
                                                                                கண்ணன் *17 -01-2012

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள