Sunday, January 8, 2012

நயாகரா அருவி-ஒரு பார்வை

நயாகரா அருவி அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி
என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா
ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது,
 
உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.

 
"ஹார்ஸ் ஷூ" அருவி (அமெரிக்கா) சுற்றுவட்டக்காட்சி.
இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.

அழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும். இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயாகரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ) ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நீரோடத்தை மின்னாற்றல் ஆக மாற்ற இங்குள்ள ராபர்ட்டு மோசசு (Robert Moses) மின் நிலையமும், ஆடம் பெக் (Adam Beck) என்னும் இரு மின் நிலையங்களும் சேர்ந்து 4 கிகா வாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இது நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கும் மின்னாற்றல் ஆகையால், சுற்றுப்புறம் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவிப்பதில்லை.

மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)

குதிரை லாட அருவி அருகே செல்லும் மெய்ட் ஆப் த மிஸ்ட் படகு.
மெயிட் ஆஃப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும் நிகழ்வுக்கு பெயராகும். இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல முடியும். அமெரிக்கப் பகுதியிலிருந்தும் கனேடியப் பகுதியிலிருந்தும் இதற்கான படகுகள் செல்கின்றன.

கேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds )

பிரைடல் வெய்ல் அருவி அமெரிக்க பகுதியில் அமெரிக்கன் அருவிக்கு அருகில் உள்ளது. இவ்வருவியை கீழிருந்து பார்க்க மர படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.

வானவில் பாலம் (Rainbow Bridge)

வானவில் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது.


நன்றி : விக்கிபிடியா


வாழ்கையில் சந்தர்ப்பம் கிடைத்தால்
ஒரு முறைவாவது சென்றுவிடுங்கள்


1 comment:

  1. நயாகரா பற்றிய தகவல்கள் அனைத்தும் தேவையானவை பயனுள்ளவையும் கூட.
    வாழ்க வளமுடன்.
    SnR.DeVaDaSs

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள