ஆதாம் ஏவாள் கதை

ஆதாமின் கதை


 


ஆதாமைப் பற்றியக் கதையை பைபிளில், பழைய ஏற்பாட்டின் முதல் நூலான தொடக்க நூலில் காணலாம். இந்த எழுத்துக்கள் கிறிஸ்தவ மற்றும் யூத மத நம்பிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி, கடவுள் ஆதாமை, தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆதாம் உலகின் எல்லா உயிரினங்களுக்கும் பெயரிடுமாறு கடவுளால்
அனுமதிக்கப்பட்டான். பின்பு கடவுள் அவனது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தார். ஆதாம் எல்லா மனிதருக்கும் தாயானவள் என் பொருள்படும்படி அவளுக்கு ஏவாள் என பெயரிட்டான். அவர்கள் கடவுளின் கட்டளையை மீறி, அவரால் தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் உண்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள்.
ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறியவுடன் ஆதாம் வேலை செய்து ஏவாளுக்கு உணவு வழங்க வேண்டியதாயிற்று. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயின், ஆபேல், சேத் என்ற மகன்கள் பிறந்ததாக தொடக்க நூல் (ஆதியாகமம்) கூறுகிறது. ஆதாம் மேலும் பல குழந்தைகளைப் பெற்றதாகவும் விவிலியம் கூறுகின்றது. ஆதாம் 930 வருடங்கள் பூமியில் வாழ்ந்ததாகவும் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது.


ஆதியாகமத்தில்

தேவன் (எலோஹீம்) மனிதனைப் படைத்தாரென்று ஆதியாகமப் புத்தகம்- முதல் அதிகாரம் கூறுகிறது. "அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் (எபிரேய மூல மொழியில் "ஆதாம்") என்று பேரிட்டார்..." (ஆதி 5:2). "ஆதாம்" என்பது "மனிதன்" என்ற சொல்லைப் போல் ஒரு பொதுவானப் பொருளை குறிக்கும் ஒரு வார்த்தையாகும். முழு மனித வர்க்கத்தையும் இந்த சொல் குறிக்கலாம். தேவன் அவர்களை "பலுகி பெருகும்படி" ஆசீர்வதித்து,"அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்" என்று கட்டளையிட்டார். (ஆதி 1:26, 27).
ஆதியாகமம் 2வது அதிகாரம் கூறுகிறபடி, தேவனாகிய கர்த்தர் ஆதாமை "பூமியின் மண்ணினாலே உருவாக்கி", ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதி", அவனை ஜீவாத்துமாவாக ஆக்கினார். (ஆதி 2:7). பின் தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்திலே வைத்து "நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டார்.(ஆதி 2:16,17). பின்பு தேவன் "மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல" என்றுக் கண்டார். பின்பு தேவனாகிய கர்த்தர் "வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும்", ஆதாம் அவைகளுக்கு பேரிடும்படியாக அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அனால் அந்த மிருகங்களில் ஒன்றாகிலும் ஆதாமுக்கு "ஏற்றத் துணையாக" காணப்படவில்லை. ஆதலால் தேவன் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, விலா எலும்பை மனுஷியாக உருவாக்கினார். அவளுக்கு ஆதாம் "ஏவாள்" என்ற பெயரிட்டான்.
அதன் தொடர்ச்சியாக ஆதாமும் ஏவாளும் "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்" என்ற தேவனுடையக் கட்டளையை உடைத்தப் படியினால்,

தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்; சாவாமையை இழந்தார்கள். ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களின் வெளியேற்றத்திற்கு பின், தன் உணவிற்கு கடினமாக உழைக்க வேண்டியக் கட்டாயம் முதன்முறையாக ஆதாமிற்கு வந்தது. அவனும் ஏவாளும் அனேக பிள்ளைகளைப் பெற்றாலும், ஆபேல், காயின் மற்றும் சேத் என்ற மூன்று பெயர்களை மட்டுமே ஆதியாகாமம் குறிப்பிடுகிறது.
 

கதையின் கருத்து

இஸ்ரயேல் மக்களின் கடவுளே, நாம் வாழும் பிரபஞ்சத்தையும் மனிதரையும் படைத்தவர் என்பதை வலியுறுத்துவதே இக்கதையின் நோக்கமாகும். சிலர், ஆதாம் உண்மையில் வாழ்ந்த நபர் என்று கருதினாலும் அதில் உண்மை இல்லை. இக்கதையில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள்மீது எழும் சந்தேக கேள்விகளே இதற்கு ஆதாரம். மேலும், இக்கதை பாபிலோனியப் படைப்பு கதையை அடிப்படையாக கொண்டு சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டது. இக்கதையில் குறிப்பிடப்படும் ஏதேன் தோட்டமும் பாபிலோனையேக் குறிக்கிறது; திக்ரீசு, யூப்பிரத்தீசு ஆறுகள் அங்கேயே ஓடின. மனிதர்கள் உலகில் கடவுளின் பிரதிநிதிகள், அவர்கள் தங்களுக்கு கடவுளால் தரப்பட்டுள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வெண்டும், உலகப் பொருட்களால் மயங்கி உண்மை கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யக்கூடாது என்னும் கருத்துகளையும் இக்கதை எடுத்துரைக்கிறது.


நன்றி : விக்கிப்பிடியா


Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts